Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 பெப்ரவரி 12 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.ஜெகநாதன்
“ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன, மத குரோதங்களை ஏற்படுத்துவதாகவும், நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் உள்ளமையால், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு, வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று (12) கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில் மேலும்,
“உள்ளுராட்சி சபைத்தேர்தலுக்கான ஐக்கியதேசியக்கட்சியின் விஞ்ஞாபனத்தில், 1000 விகாரைகள் 500 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், இன, மத குரோதங்களையும் ஏற்படுத்துகின்றது.
எனவே இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன் எதிர்காலத்தில் இவ்வாறான சமூக பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தவிர்க்க, ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .