2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

ஒன்பது ஆடுகளை தின்று நாய்கள் ஏப்பமிட்டன

Editorial   / 2018 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோரக்கன்கட்டு என்ற பகுதியில், வாழ்வாதாரத்துக்காக வழங்கப்பட்ட ஒன்பது ஆடுகளை, கட்டாக்காலி நாய்கள் இன்று (12) காலை வேட்டையாடின.

இந்த ஆடுகளின் பெறுமதி, சுமார் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வரும் என்று, கால்நடை வளர்ப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று, கடந்த காலங்களில் சுமார் 40 க்கும் மேற்பட்ட ஆடுகளை, இந்தக் கட்டாக்காலி நாய்கள் கொன்று, தமக்கு இரையாக்கியுள்ளன எனவும், அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இது தொடர்பாக, பொலிஸாரிடமும் கால்நடை வைத்திய அதிகாரிகளிடமும் தெரியப்படுத்தியும், எந்தப் பயனும் கிடைக்கவில்லை என்று, கால்நடை வளர்ப்பவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .