2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது

Freelancer   / 2023 மார்ச் 18 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது, பாஸ் நடைமுறையும் இல்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  திட்ட வட்டமாக தெரிவித்தார்.

வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு கடற்றொழிலாளர்களுடன் கடற்றொழில் அமைச்சர் நேற்று கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, மீனவர்களது பிரசினை தொடர்பில் ஆராய்ந்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

முதற்கட்டமாக இத்திய மீனவர்களது இழுவைப் படகு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன் போது இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது, பாஸ் நடைமுறையும் இல்லை என திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழக இராஜாங்க அமைச்சர் திரு முருகன், இத்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் பஜாக தமிழக தலைவர் அண்ணாமலை ஆகியோரிடமும் இராஜ தந்திர ரீதியாகவும் நட்பு ரீதியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது என.

இனி இந்திய கடல் எல்லையில் படகுகளில் சென்று ஆர்ப்பாட்டம் நடாத்தித் தான் எமது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டியுள்ளது.

அப்போது இந்திய ஊடகவியலாளர்களும், இலங்கை ஊடகவியலாளர்களும் நேரில் வந்து செய்திகளை சேகரித்து நிலமைகளை அவதானித்துச் செல்லட்டும். அப்போது தான் இந்தியாவில் உள்ள மக்களுக்கு இலங்கை நிலவரம் புரியும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X