2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் நேர முகாமைத்துவமின்மையால் மக்கள் அவதி

Kogilavani   / 2016 பெப்ரவரி 03 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் நேர முகாமைத்துவம் பின்பற்றுதல் ஒரு பிரச்சினையாகத் தொடர்கின்றது.
தெல்லிப்பழை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்றபோது, மக்கள் தங்கள் பிரச்சினைகளை ஒரு நிமிடத்தில் சுருங்கச் சொல்லுமாறு இணைத் தலைவர்களில் ஒருவரான மாவை சேனாதிராசா அடிக்கடி வலியுறுத்திக் கொண்டிருந்தார்.  ஆனால் அவர் உரையாற்றும் போது. 21 நிமிடங்களை எடுத்துக்கொண்டார்.

இணைத்தலைவர்களின் உரையை, மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த பின்னர் நடத்தலாம் என மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் அங்கஜன் இராமநாதன் தெரிவித்திருந்தார்.
எனினும் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல், ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இணைத்தலைமைகளின் உரையுடனேயே ஆரம்பிக்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X