Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூலை 17 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். தில்லைநாதன்
வடமராட்சி - நெல்லியடி, மாலைசந்திப் பகுதியில் மணல் கடத்தலை தடுக்க பொலிஸார் டிப்பர் ஒன்றை விரட்டிச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர். இதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சனிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மணல் கடத்திச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்றை பருத்தித்துறை பொலிஸார் மறித்த போதும், அந்த வாகனம் நிற்காமல் சென்றுள்ளது.
இதையடுத்து, பொலிஸார் அவர்களை விரட்டிச் சென்ற நிலையில், குறித்த டிப்பர், மாலைசந்தை பிள்ளையார் ஆலயத்தின் சப்பைரதத் திருவிழாவை முன்னிட்டு இடம்பெற்ற இசைக் கச்சேரியை பார்த்துக்கொண்டு வீதியோரமாக நின்றவர்களை மோதித் தள்ளியது. இதில், 7 பேர் படுகாயமடைந்தனர்.
இவர்கள் அனைவரும் உடனடியாக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் கிடைக்கின்றன.
இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய டிப்பர் தப்பிச் சென்றுள்ளது. மணல் கடத்தல் மற்றும் விபத்து சம்பவங்கள் தொடர்பில் பருத்தித்துறை, நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர். (R)
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago