Princiya Dixci / 2022 ஜூலை 27 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் 82 போத்தல் கசிப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, 82 போத்தல் கசிப்பு மற்றும் 238 லிட்டர் கோடாவும் மீட்கப்பட்டன.
அத்துடன், கசிப்பு உற்ப்பத்திக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களும் உள்ளூர் இடியன் துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டமையால் அவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில், சந்தேக நபரொருவர், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தருமபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
10 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago