Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜனவரி 30 , மு.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
கொடிகாமம் நாகநாதன் வீதியில் உள்ள வீடொன்றினுள் தொடர்ச்சியாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவருக்கு அதிகூடிய தொகையாக 1 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான ஸ்ரீநிதி நந்தசேகரன், நேற்று வெள்ளிக்கிழமை (29) தீர்ப்பளித்தார்.
அத்துடன், குறித்த பெண்ணுக்கு 05 வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனையும் விதித்தார்.
கொடிகாமம் நாகநாதன் பகுதியில் உள்ள வீட்டைச் சுற்றி வளைத்த பொலிஸார், அவ் வீட்டில் இருந்து 10 லீற்றர் கொள்ளளவு கொண்ட கோடாவினை மீட்டிருந்தனர்.
சந்தேகநபருக்கு எதிராக கொடிகாமம் பொலிஸார் பதிவு செய்த வழக்கு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குறித்த பெண்ணுக்கு எதிராக ஏற்கெனவே குற்றங்கள் இருப்பது நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்தது.
இதனையடுத்து நீதவான், அபராதத்துடன் சிறைத்தண்டனையையும் விதித்து தீர்ப்பளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .