2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

’கஞ்சா பொதிகளை வீசியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

நெல்லியடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லியடி – துன்னாலை வீதியில், நேற்று (18) இரவு 11 மணியளவில், 65 கிலோ கிராம் கஞ்சா பொதிகளை வீசிவிட்டுச் சென்றவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, நெல்லியடி பொலிஸார், இன்று (19) தெரிவித்தனர்.

அத்தடன், அவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், பொலிஸார் கூறினர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய ஸ்தலத்துக்கு விரைந்த

சிறப்பு அதிரடிப்படையினர், சந்தேகத்துக்கிடமான மறையில் வந்த கப் ரக வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.

இதன் போது, குறித்த கப் ரக வாகனம் நிறுத்தமாமல் சென்றதையடுத்து, சிறப்பு அதிரடிப்படையினர் வாகனத்தைத் துரத்திச் சென்றுள்ளனர்.

இதன்போது, வாகனத்தில் பயணித்தவர்கள், கஞ்சா பொதிகளை வீசிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்..

இதையடுத்து, 65 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் பொதிகள் மீட்கப்படடு, அவை நெல்லியடிப் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X