Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஓகஸ்ட் 16 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
25 வருடங்கள் மதிக்கத்தக்க 3 அடி நீளமான கடலாமையினை வெட்டி இறைச்சியாக்கிய மூவரை தலா 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பிணையில் செல்ல மல்லாகம் மாவட்ட நீதிவான் ஏ.யூட்சன் திங்கட்கிழமை (15) அனுமதியளித்தார்.
அத்துடன் மேற்படி வழக்கினை எதிர்வரும் 24ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதகல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து கடலாமையினை வெட்டி இறைச்சியாக்கிய மூவரை குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்திருந்தனர்.
சந்தேக நபர்களை மன்றில் முற்படுத்திய போது நீதிவான் பிணையில் செல்ல அனுமதியளித்தார். அத்துடன் மீட்கப்பட்ட 5கிலோ இறைச்சியினை பொதுச்சுகாதார பரிசோதகர் முன்னிலையில் எரியூட்டி அழிக்குமாறும் கட்டளையிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .