2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

கடையடைப்புக்கு அழைப்பு

Editorial   / 2017 ஜூன் 15 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன் 

மாகாணசபை உறுப்பினர்கள் சிலரினால்,  வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கண்டித்து, வடக்கு மாகாணத்தில்  நாளை (16) கடையடைப்பை மேற்கொள்ளுமாறு, தமிழ் மக்கள் பேரவை கேட்டுள்ளது. 

"இந்த குறுகிய முன்னறிவிப்பை பொறுத்துக்கொண்டு, இனத்தின் நலன்கருதி எமது உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்குடன், அனைவரும் இந்தக் கடையடைப்புக்கு ஆதரவு தரவேண்டுமென நாம் விநயமுடன் வேண்டுகிறோம். 

மேலும், பதவி போன்ற அற்ப பேரங்களுக்காக கோட்பாடுகளை விட்டுக்கொடுக்காது, எமக்காக புரியப்பட்ட தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் மனதில் கொண்டு மனச்சாட்சியுடன் செயற்பட முன்வருமாறு வடமாகாணசபை அங்கத்தவர்கள் அனைவரையும் இனத்தின் பெயரால் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்" என தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X