2025 மே 01, வியாழக்கிழமை

கட்டுவன் – மயிலிட்டி வீதியை செப்பனிடும் இராணுவத்தினர்

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 21 , பி.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்க்ச் செல்லும் வீதியில் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருக்கும் 400 மீற்றர் நீளமான கட்டுவன் - மயிலிட்டி வீதி விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வீதியமைக்கும் பணிகளுக்கான செப்பனிடல் பணிகளை இராணுவத்தினரின் பொறியியல் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர். 

இதனையடுத்து இன்று பொதுமக்களின் காணியூடாக அமைக்கப்படும் வீதி கட்டுவன் சந்தியிலிருந்து மயிலிட்டி செல்லுகின்ற காப்பெற் வீதியுடன் இணைக்கும் பணிகள் இடம்பெற்றன. 

விமான நிலையத்துக்குச் செல்லும் கட்டுவன் - மயிலிட்டி வீதியில் 400 மீற்றர் நீளமான வீதி இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் கடந்த 32 ஆண்டுகளுக்கு மேலாகக் காணப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .