2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கட்சி சார்பாக கலந்து கொண்டதாக சிற்றம்பலம் தெரிவித்துள்ள கருத்துக்கு மாவை மறுப்பு

Gavitha   / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

தமிழ் மக்கள் பேரவையில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக கலந்து கொண்டுள்ளதாக, கட்சியின் சிரேஷ்ட தலைவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்துள்ள நிலையில், தமது கட்சி சார்பாக எவரும் பேரவையில் கலந்து கொள்ளவில்லை என்றும் அவ்வாறு கலந்து கொண்டவர்கள் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்றும் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாம் நாள் அமர்வு ஞாயிற்றுக்கிழமை (27) யாழ்.பொது நூலகத்தில் இடம்பெற்றது.

இதன் முடிவில் இடம்பெற்ற ஊடகவியாலர் சந்திப்பின்போது,  சபையில் இருந்த பேராசிரியர் ச.க.சிற்றம்பலம் தான் தமிழரசுக்கட்சியை ஆரம்பத்தில் வழி நடத்தி தலைவராகவும் இருந்துள்ளேன். அப்போது கட்சி கொண்டிருந்த நிலைப்பாடுகளுடன், இந்தப் பேரவையின் நிலைப்பாடும் காணப்பட்டதால், இதில் இணைந்துள்ளேன். நான் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாகவே இதில் இணைந்துள்ளேன் என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .