2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

கனடாவுக்கு சட்டவிரோதமாக சென்று உயிரிழந்தவரின் சடலம் ஒப்படைப்பு

Editorial   / 2022 டிசெம்பர் 19 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்

 

கனடாவுக்கு படகின் மூலம் சட்ட விரோதமாக சென்று உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயற்சித்த போது, படகு பழுதடைந்த நிலையில், நவம்பர் மாதம் 08 ஆம் திகதி 303 அகதிகளும் வியட்நாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

இவ்வாறு வியட்நாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் இருவர், தங்களை நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டாமென தெரிவித்து நவம்பர் மாதம் 18 ஆம் திகதி தற்கொலைக்கு முயற்சித்தனர்.

இருவரும் வியட்நாமிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 37 வயதான சுந்தரலிங்கம் கிரிதரன் உயிரிழந்தார்.

உயிரிழந்த சாவகச்சேரி, கல்வயல் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம், உறவினர்களிடம் ஞாயிற்றுக்கிழமை (18) ஒப்படைக்கப்பட்டது.

அவரின் இல்லத்தில் இறுதிக்கிரியைகள் திங்கட்கிழமை (19) இடம் பெற்று சாவகச்சேரி கண்ணாடிப்பெட்டி மயானத்தில் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X