Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 பெப்ரவரி 19 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் சுமார் 23 திணைக்களங்கள் கள விஜயத்தை மேற்கொண்டு கணிய மணல் அகழ்வுக்கான சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கையை வழங்க மன்னார் கொன்னையன் குடியிருப்பு பகுதிக்கு கடந்த இரண்டு தடவைகள் வருகை தந்து இறுதியில் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் குறித்த குழுவினர் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை(17) மணல் அகழ்வுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் புதன்கிழமை(19) காலை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் சுமார் 23 திணைக்களங்கள் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு கட்டமாக வருகை தந்தனர்.
இதன் போது மாவட்டச் செயலக பகுதியில் போராட்டம் முன் னெடுக்கப்படலாம் என்ற நோக்கத்துடன் பொலிஸார் அப்பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மக்களின் காணிகளின் ஊடாக தனியார் காணியில் கணிய மணல் பரிசோதனைக்கான கள விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.இதன் போது மக்களும் தொடர்ந்தும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
பாராளுமன்றத்தில் குறித்த கணிய மணல் பரிசோதனை மற்றும் அகழ்வு நடவடிக்கைக்கு எதிராக உரை நிகழ்த்திய நிலையில்,குறித்த விடயம் தொடர்பாக உயர் மட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதன் போது பொது அமைப்புகளின் தலைவர் வி.எஸ்.சிவகரன்,மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளர், உள்ளடங்களாக கிராம மக்கள்,சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள்,மீன்பிடி அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
33 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago