2025 ஒக்டோபர் 08, புதன்கிழமை

குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு : யாழில் ஆர்ப்பாட்டம்

Janu   / 2025 ஒக்டோபர் 08 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் நல்லூர் பிரதேச சபையின் திட்டத்துக்கு அந்த ஊர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமது எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக  அரியாலை கிழக்கு பகுதியில் புதன்கிழமை (08) அன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் குறித்த இடத்திற்கு வரவேண்டும் என கூறி ஆர்ப்பாட்டக்காரர்கள் , வீதியை வழி மறித்ததால் அப் பகுதியூடாக போக்குவரத்தும் தடைப்பட்டது.

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வந்த போது மக்கள் தமது பாரிய எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன்  குறித்த பகுதிக்கு இனிமேல்  குப்பை கொட்டும் வாகனங்கள் வந்தால் அந்த வாகனங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல. என எச்சரிக்கை விடுத்தனர். இதன்போது தவிசாளரிடம் மகஜர் ஒன்றும்  கையளிக்கப்பட்டது.

பின்னர் போராட்டக்காரர்கள் பேரணியாக சென்று ஆளுநர் செயலகத்திலும் மகஜர் ஒன்றை கையளித்தனர்.

பு.கஜிந்தன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X