2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

கரவெட்டியில் 278 இடங்களில் டெங்கு குடம்பிகள் கண்டுபிடிப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 06 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.கண்ணன் 

கரவெட்டி சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட பிரிவுகளில், கடந்த 3 மாதங்களில் 278 இடங்களில் டெங்கு குடம்பிகள் காணப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த பரிசோதகர்கள், நெல்லியடி சுகாதாரப் பிரிவில் 132 இடங்களும் துண்ணாலைச் சுகாதாரப் பிரிவில் 84 இடங்களும், கரணவாய் சுகாதாரப் பிரிவில் 35 இடங்களும்,  அல்வாய் சுகாதாரப் பிரிவில் 15 இடங்களும்,  உடுப்பிட்டிச் சுகாதாரப் பிரிவில் 12 இடங்களுமாக மொத்தம் 278 இடங்களில் டெங்கு குடம்பிகள் காணப்பட்டுள்ளதாகவும் அவ்விடங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினர். 

இதன் முதற்கட்டமாக, 32 பேருக்கு எதிரான வழக்குகள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகவும், பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

ஏனையோர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் திகதியிடப்பட்டுள்ளதாகவும் பரிசோதகர்கள் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X