2025 மே 19, திங்கட்கிழமை

“கருத்துக்களால் களமாடுவோம்’’ அரசியல் கருத்தரங்கு

எம். றொசாந்த்   / 2019 ஜனவரி 08 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் தேசிய பிரச்சனைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாக தீர்வும் தமிழ் தலைமைகளின் வகிபாகமும் எனும் தொனிப்பொருளில் “கருத்துக்களால் களமாடுவோம்" எனும் அரசியல் கருத்தரங்கு யாழில் நடைபெறவுள்ளது.

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (12) மாலை 3 மணியளவில் குறித்த கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசன் தலைமையில் நடைபெறவுள்ள இக் கருத்தரங்கில் வல்வெட்டித்துறை சிவன் கோவில் பிரதம குரு பிரம்மஸ்ரீ ப.மனோகரக்குருக்கள், தென்னிந்திய திருச்சபை பேராயர் டானியல் தியாகராஜா, யாழ்.பல்கலைகழக பொருளியல் பீட பேராசிரியர் கலாநிதி சு.சிவகுமார், யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, மூத்த ஊடகவியலாளர் ந.வித்தியாதரன் ஆகியோர் கருத்துரை வழங்கவுள்ளனர்.

அதற்கு பதிலுரையை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏசுமந்திரன் வழங்கவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X