2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

கர்ப்பிணி பெண் படுகொலை: சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

எம். றொசாந்த்   / 2018 பெப்ரவரி 21 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊர்காவற்றுறை பகுதியில் கர்ப்பிணி பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 2 சந்தேக நபர்களின் விளக்கமறியலையும் எதிர்வரும் மார்ச் மாதம் 07 ஆம் திகதி வரை நீடித்து ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் இன்று (21) உத்தரவிட்டார்.

கர்ப்பிணி பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பொலிஸாரின் விசாரணைகள் திருப்திகரமானதாகவும் துரித கதியிலும் இடம்பெறவில்லை என தெரிவித்து, குறித்த வழக்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு மாற்றுமாறு, சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனையடுத்து, குற்றப்புலனாய்வு பிரிவு வழக்கு விசாரணைகளை பொறுப்பேற்க வேண்டும் என நீதவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில், இன்று (21) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பொலிஸாரே வழக்கில் முன்னிலையாகியிருந்தனர். பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தல் கிடைக்கப்பெறாமையால் குறித்த வழக்கை பொறுப்பேற்க முடியவில்லை என குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதவானின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

இதனையடுத்து, சந்தேக நபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 07ஆம் திகதி வரை நீடித்து நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .