2025 மே 21, புதன்கிழமை

கழிவு வௌியேற்றத்துக்கு விரைவில் தீர்வு கிட்டும்?

Editorial   / 2018 ஓகஸ்ட் 22 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை, உரிய நியமங்களுக்கமைய சுத்திகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென, வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ரி.சத்தியமூர்த்தி, இன்று (22) உறுதியளித்தார்.

கடந்த 20ஆம் திகதியன்று நடைபெற்ற யாழ்ப்பாண மாநகரசபை அமர்வின் போது, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை, உரிய நியமங்களுக்கமைய சுத்திகரிக்காமல், குடாக்கடலில் கலப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் பரிசோதிப்பதற்காக, மாநகரசபை உறுப்பினர்களும் வைத்தியசாலைப் பணிப்பாளரும், குறித்த சுத்திகரிப்பு நிலையத்துக்கு, நேற்றுக் காலை விஜயம் மேற்கொண்டனர்.

இதன்போது, குறித்த சுத்திகரிப்பு நிலையத்தில், உரிய முறையில் சுத்திகரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திய வைத்தியசாலைப் பணிப்பாளர், அது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .