Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட வீடுகளில் இருந்தும் விடுதிகளில் இருந்தும் சேகரிக்கப்படும் கழிவுநீரைச் சுத்திகரிக்கும் நிலையத்துக்கான அடிக்கல், வட மாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனால், காக்கைதீவு பிரதேசத்தில், இன்று திங்கட்கிழமை (22) நாட்டப்பட்டது.
18.5 மில்லியன் ரூபாய் செலவில், இக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. யாழ். மாநகரசபையின் எல்லைக்கு உட்பட்ட 23 வட்டாரங்களில் இருந்தும், கழிவுநீர்த் தாங்கிகளின் மூலம் எடுத்து வரப்படும் கழிவுநீர், சுதிகரிப்பு இயந்திர வசதி இன்மை காரணமாக கல்லுண்டாய்ப் பகுதியில் உரிய முறையில் சுத்திகரிக்கப்படாத நிலையில் கொட்டப்பட்டது.
பலரும் இதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டியதை அடுத்தே, யாழ். மாநகரசபை, உள்ளுராட்சி அமைச்சின் அபிவிருத்தி நன்கொடை ஆகியவற்றிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு, கழிவுநீர்ச் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
தற்போது 30ஆயிரம் லீற்றர் கழிவு நீர், யாழ். மாநகரசபைக்கு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அகற்றப்படுகிறது. எதிர்காலத்தில் விடுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் 50 ஆயிரம் லீற்றர் கழிவுநீரைப் சுத்திகரிக்கும் வகையில் இந்நிலையம் அமைக்கப்படவுள்ளது.
சுத்திகரிக்கப்பட்டு வெளியேறும் நீர், சுத்திகரிப்பு நிலையத்தை அண்மித்துள்ள தென்னந்தோட்டங்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளதுடன் திண்மப்பொருட்கள், சேதனப்பசளை தயாரிப்புக்கு பயன்படுத்தப்படவுள்ளது. இந்நிலையத்தின் கட்டுமானப்பணிகள் நான்கு மாதங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
யாழ். மாநகரசபை ஆணையாளர் பொ.வாகீசன் தலைமையில் இடம்பெற்ற அடிக்கல் நாட்டும் நிகழ்வில், வட மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
12 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
29 minute ago