எம். றொசாந்த் / 2018 ஏப்ரல் 05 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட சிங்கள குடியிருப்புக்கள் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர்கள் நேரில் சென்று ஆராயவுள்ளனர்.
முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விசேட அமர்வு இன்று (05) வடமாகாண சபையில் நடைபெற்றது.
அதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு உள்ள திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் நேரில் சென்று ஆராய்வதுக்கு வடமாகாண சபையில் உறுப்பினர்கள் ஏக மனதாக முடிவெடுத்துள்ளனர்.
அதன் பிரகாரம் எதிர்வரும் 10 ஆம் திகதி காலை 9 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக வடமாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி முல்லைத்தீவில் திட்டமிட்டு சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள கொக்கிளாய், நாயாறு மாயபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று அந்த பகுதிகளை பார்வையிடுவதுடன், மாலை மீண்டும் மாவட்ட செயலகம் முன்பு கூடி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடாத்தி மாவட்ட செயலர் ஊடாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மகஜர் கையளிப்பது என சபை உறுப்பினர்கள் ஏக மனதாக தீர்மானித்து உள்ளனர்.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025