2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

காணிகள் அபகரிக்கப்பட்டு வழங்கப்படுவதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன

Editorial   / 2018 செப்டெம்பர் 30 , பி.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன்

ஐனாதிபதி தலைமையில் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணிக் கூட்டத்தின்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி எல் வலயத்தினூடாக தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகள் திட்டமிட்ட வகையில்அபகரிக்கப்பட்டு தென்பகுதி சிங்கள மக்களுக்கு வழங்கப்படுவது தொடர்பில் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியிலாளர் சந்திப்பின்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் தெரிவித்ததாவது,

“ஐனாதிபதி தலைமையில் எதிர்வரும் 3ஆம் திகதி மாலை மூன்று மணிக்கு வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணி கூட்டமானது   இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பாகவும் பேசவுள்ளோம். இதேவேளை இங்கு மற்றுமொரு முக்கிய விடயம் தொடர்பாகவும் பேசவுள்ளோம்.

அதாவது முல்லைதீவு மாவடத்தில் இடம்பெறுகின்ற மகாவலி எல் வலயத்தினூடாக தமிழர்களது பூர்விக நிலங்கள் பறிக்கப்பட்டு அவை வெளி மாவட்டத்தவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இது தொடர்பாக கடந்த கூட்டத்தில் நாம் தெரிவித்த போதும் பணிப்பாளருடன் பேசி விட்டு அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது இடம்பெறவுள்ள கூட்டத்தில் அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்பு தொடர்பான ஆதாரங்களை திரட்டியுள்ளோம். அவற்றை ஜனாதிபதி முன்னிலையில் சமர்பித்து இது தொடர்பாக பேசவுள்ளோம். முல்லைதீவில் இடம்பெறும் இவ்வாறான நில ஆக்கிரமிப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தவுள்ளோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .