2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

காரைநகரில் இந்திய மீனவர்கள் 22 பேர் கைதாகினர்

Editorial   / 2022 பெப்ரவரி 24 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

காரைக்கால் மற்றும்  நாகை மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையினரால் நேற்று (23) இரவு கைது செய்யப்பட்டனர்.

காரைநகரை அண்டிய கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு ரோலர்களில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 22 இந்திய மீனவர்களே கைது செய்யப்பட்டு, மயிலிட்டி துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டனர்.

இவர்கள் தொழிலில் ஈடுபட்ட படகுகள், கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், படகிலிருந்த மீனவர்களுக்கு கொரோனா தொற்று  தொடர்பிலும் மலேரியா தொற்றுத் தொடர்பிலும் சுகாதாரத் துறையினரால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதனைத் தொடர்ந்து குறித்த 22 பேரையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X