Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 01 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
காரைநகரின் நுழைவாயிலுக்கு அண்மையில், சிவன் சிலை அமைப்பதற்கான வேலைகளை காரைநகர் பிரதேச சபை தடுத்து நிறுத்தியுள்ளது. முறையான அனுமதி பெறப்படாமல், இச்சிலை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்தே, இது தடுத்து நிறுத்தப்பட்டது.
காரைநகர் பிரதேச சபையின் உப தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன், பொலிஸாரின் உதவியுடன் இந்தச் சிலை நிர்மாணப் பணிகளை, நேற்று (30) தடுத்து நிறுத்தினார்.
காரைநகர் நுழைவாயிலில், காரைநகர் சைவ மகா சபையால், சிவபெருமானின் பாரிய சிலையொன்று அமைப்பதற்கு, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்கான வேலைகள் நேற்று முன்தினம் (30) ஆரம்பிக்கப்பட்டன.
இதன்போது, அங்குசென்ற உப தவிசாளர் பாலச்சந்திரன், இந்த நிர்மாணப் பணிகளுக்கான அனுமதியை பிரதேச சபையிடம் இருந்து பெறவில்லை எனக் குறிப்பிட்டு, வேலைகளை நிறுத்துமாறும், இல்லையேல் பொலிஸாருக்கு அறிவிக்கவேண்டி ஏற்படுமெனவும் எச்சரித்துள்ளார்.
உப தவிசாளரின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாது வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்ததையடுத்து, ஸ்தலத்துக்குப் பொலிஸாரை வரவழைத்த உப தவிசாளர், அவர்கள் மூலம் அந்த வேலைகளைத் தடுத்து நிறுத்தினார்.
உப தவிசாளரின் செயற்பாடு குறித்து, அவரிடம் வினவிய போது, உரிய அனுமதி பெறப்படாததையடுத்தே, குறித்த பகுதியில் சிவன் சிலையை அமைப்பதைத் தடுத்து நிறுத்துமாறு தவிசாளரால் அறிவுறுத்தப்பட்டது எனவும், அதற்கமையைவே, இப்பணிகளை தடுத்து நிறுத்தியதாகவும் குறிப்பிட்டார்.
"எம்மைப் பொறுத்த மட்டில், நியாயமான முறையில் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதே, எமது நோக்கமாகும்.
"எனவே, புதன்கிழமை (03) விசேட கூட்டமொன்றை கூட்டி, அதில் சைவ அமைப்புகளை அழைத்து, இது தொடர்பில் தெளிவுபடுத்தவுள்ளோம்" என அவர் தெரிவித்தார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
3 hours ago
5 hours ago