Freelancer / 2023 பெப்ரவரி 28 , மு.ப. 08:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
நெல்லியடிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரவெட்டி, கப்பூது பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற தோட்டக் கிணற்றில் வீழ்ந்து 65 வயதான வேலுப்பிள்ளை பொன்னையாபிள்ளை வயோதிபர் ஒருவர் நேற்றைய தினம் (27) உயிரிழந்துள்ளார்.
மேற்படி நபர் பாதுகாப்பற்ற வயல் கிணற்றில் சடலமாக காணப்பட்டமை தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு நேற்று (27) மாலை சென்ற கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணை மேற்கொண்டு சடலத்தை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நெல்லியடி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
மேலும் அப்பகுதியில் பாதுகாப்பற்ற கிணறுகள் காணப்படுவதாகவும் அவற்றை காணி உரிமையாளர்கள் பாதுகாப்பு வேலி அமைத்து பாதுகாப்பானதாக செய்ய வேண்டும் எனவும் மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார். R
35 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
50 minute ago