Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 20 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
இருதயத்தில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாக, கிளிநொச்சியை சேர்ந்த கல்வியல் கல்லூரி மாணவி ஒருவர், சனிக்கிழமை (18) உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி - விசுவமடு மேற்கைச் சேர்ந்த சிவலிங்கம் ஜிந்துஜா (வயது 23) எனும் மாணவியே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அளுத்கம கல்வியல் கல்லூரியில் 2ஆம் வருடத்தில் கல்விக் கற்று வரும் குறித்த மாணவி, கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு, கல்வி சுற்றுலா மேற்கொண்டு இருந்தார்.
இந்நிலையில், திடீரென குறித்த மாணவி சுகவீனமுற்றதை அடுத்து, கல்வியல் கல்லூரி நிர்வாகத்தினரால் மாணவி வீட்டாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதையடுத்து, கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக மாணவி அனுமதிக்கப்பட்ட பின்னர், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago