Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 பெப்ரவரி 19 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி - கண்டாவளை, புளியம்பொக்கணை முசுரம்பிட்டி கிராம மக்கள் குடிநீர் மற்றும் போக்குவரத்து நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
இக்கிராமத்தில் அண்மையில் அமைக்கப்பட்ட வீதிக்கு மதகுகள் அமைக்கப்படாததன் காரணமாக வெள்ளம் வடிந்தோட முடியாமல் மக்களின் குடியிருப்புக்குள் வெள்ளம் வருவதாகவும் வெள்ளம் வடிந்தோடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
சுமார் 80 குடும்பங்கள் வாழ்கின்ற இக்கிராமத்தில் குடிநீர் நெருக்கடி தொடர்ந்து நிலவுகின்றது.
ஜுன், ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் குடிநீர் நெருக்கடி காணப்படுவதாகவும் குடிநீர் நெருக்கடியை தமது கிராமத்தில் தீர்ப்பதற்கு பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்காலத்தில் முசுரம்பிட்டி கிராமத்தில் குடிநீர் நெருக்கடியை முழுமையாக தீர்ப்பதற்கு அதிகாரிகள் நிரந்தர தீர்வை வழங்க வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். (N)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
3 hours ago
7 hours ago