2025 மே 16, வெள்ளிக்கிழமை

குப்பிழான் விக்னேஸ்வரா வித்தியாலயப் பரிசளிப்பு விழா

Editorial   / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந்

யாழ்ப்பாணம், குப்பிழான் விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் வருடாந்தப் பரிசளிப்பு விழா, வெள்ளிக்கிழமை (29) பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெற்றது. 

மேற்படி பாடசாலையின் அதிபர் இரா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், உடுவில் பிரதேச செயலாளர் சி. ஜெயகாந், குப்பிழான் வடக்கு கிராம அலுவலர் அ.அகிலன், குப்பிழான் தெற்கு கிராம அலுவலர் ந. நவசாந்தன், ஓய்வுநிலைக் கிராம அலுவலர் சோ.பரமநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, தரம் 01 முதல் 11 வரை தவணைப் பரீட்சைகளில் கூடிய புள்ளிகள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கான பரிசில்கள், இணைப்பாட விதானச் செயற்பாட்டில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவ, மாணவிகளுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து 2018 டிசெம்பர் மாதம் இடம்பெற்ற க. பொ. த சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் 2018ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த க. கவிவாணன் ஆகியோருக்கான சிறப்புப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .