Editorial / 2020 பெப்ரவரி 21 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
யாழ்ப்பாணம் - குருநகர் பகுதிக்கு, யாழ் மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையிலான விசேட குழுவினர் நேரடிக் களவிஜயம் ஒன்றை நேற்று (20) மேற்கொண்டிருந்தனர்.
குறித்த விஜயத்தின் போது அனுமதியின்றி பொது வடிகால்களின் மீது அமைக்கப்ட்டிருந்த கட்டுமானங்களையும், குறித்த வாய்க்கால் நீர் வழிந்தோட முடியாது அமைக்கப்பட்டிருந்த தடைகளையும் கண்டறிந்து, அவற்றை முற்றாக நீக்கி நீர் வழிந்தோடக் கூடிய வகையில் மேற்கொள்ள வேண்டிய வழிவகைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.
நீண்டகாலமாக முன்வைக்கப்பட்ட தமது முறைப்பாட்டை நேரில் பார்வையிட்ட மேயர் தலைமையிலான குழுவினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி செலுத்தினர்.
இக்கள விஜயத்தில் யாழ். மாநகர பிரதம பொறியியலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதாரப் பொறியியற் பிரிவு அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள், சுகாதாரப் பிரிவினர் மற்றும் மாநகர உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
10 minute ago
13 minute ago
14 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
13 minute ago
14 minute ago
19 minute ago