Editorial / 2019 நவம்பர் 22 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன், என்.ராஜ்
தொடர்காய்ச்சல் காரணமாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் தாயொருவர், நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர், இயற்றாலை - கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த தவராசா உசா (வயது 27) என்பவாராவார்.
நவம்பர் 7ஆம் திகதி இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் 10ஆம் திகதி பெண் குழந்தை ஒன்றினை பிரசவித்துள்ளதாக கூறப்பட்டது.
குழந்தை பிரசவித்த திகதியில் இருந்து காய்சல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 20ஆம் திகதி நுரையீரலில் கிருமி தொற்று ஏற்பட்ட நிலையில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 minute ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
9 hours ago
9 hours ago