2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

கூடுதல் கடல் உணவுகளை சந்தைக்கு கொண்டு வரவும்

Freelancer   / 2023 பெப்ரவரி 24 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு கடலில் பிடிக்கப்படும் கடல் உணவுகள், நகர சந்தைக்கு முழுமையாக வருவதில்லை என பொது அமைப்புகளால் குற்றம் சாட்டப்படுகின்றது. 

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில், முல்லைத்தீவின் கடல் உணவு கிராமங்களுக்கு கொண்டு செல்லப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக முல்லைத்தீவு நகரத்துக்கே கடல் உணவுகள் முழுமையாக விற்பனைக்கு கொண்டு வரப்படாததன் காரணமாக மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு நகரச் சந்தையில் மீன் விற்பனையாளர்கள் ஐந்துக்கு உட்பட்டவர்களே காணப்படுகின்றனர். 

இதற்கான முக்கிய காரணம் கடற்கரையில் காத்திருக்கும் மீன் கொள்வனவாளர்கள் மீனை முழுமையாக கொள்வனவு செய்து, தென்னிலங்கைக்கு கொண்டு செல்வது முதன்மைக் காரணமாக உள்ளது.  

இது தொடர்பாக கரைதுறைபற்று பிரதேச சபையின் தவிசாளர் க.விஜிந்தனிடம் கேட்ட போது, “நீண்ட காலமாக இப்பிரச்சினை உள்ளது. கடல் உணவு கடற்கரையில் முழுமையாக விற்பனை செய்யப்படுவதன் காரணமாக, முல்லைத்தீவு நகரச் சந்தைக்கு மீன்கள் கொண்டு வருவதில் குறைபாடுகள் காணப்படுகின்றன.” 

“புதிய பொறிமுறையில் கடற்கரையில் இருந்து சந்தைக்கு கூடுதலான மீன்கள் கொண்டு வருவதற்கான வழிகளை ஏற்படுத்த வேண்டும். கடற்கரையில் வரிகள் செலுத்தாமல் வாகனங்களில் பிற இடங்களுக்கு மீன்களை கொண்டு செல்லும் வாகனங்களை பரிசோதனை செய்வதற்கு முல்லைத்தீவு மாதிரிக் கிராமம் சந்தியிலும் வட்டுவாகல் பாலப் பகுதியிலும் சோதனை முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். 

“முல்லைத்தீவு நகரச் சந்தைக்கு கூடுதலான மீன்கள் கொண்டு வருவதன் மூலம் கிராமங்களுக்கும் மீன்கள் சென்றடையக் கூடிய நிலைமை உருவாகும்” என பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார். (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X