2025 மே 15, வியாழக்கிழமை

’கூட்டமைப்பின் மீது வடக்கு மக்கள் வெறுப்புடன் உள்ளனர்’

Editorial   / 2020 ஜனவரி 23 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

வடக்கு மக்கள் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது வெறுப்புடன் காணப்படுவதாக, மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

 இன்றையதினம், யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “வடக்கில், தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான கருத்துகள் பலதரப்பட்டவர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவர்கள் ஒரு தலைமையின் கீழ் செயற்பட முடியாதவர்கள் எவ்வாறு தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கப் போகின்றார்கள் என்று நான் கேள்வி எழுப்ப விரும்புகின்றேன்.

“தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை எடுத்து பார்ப்போமாக இருந்தால் அது விக்னேஸ்வரனாக இருக்கலாம் சுரேஷ் பிரேமச்சந்திரனாக இருக்கலாம் என எக்கட்சித் தலைவர்களாக கூட இருக்கலாம், தற்போது அனைவரும் தமிழ் மக்களுக்கு  சேவை செய்வோம் என வந்தவர்கள், இன்று  தங்களுடைய சுகபோகங்களை அனுபவிக்கும்  முகமாகவே செயற்பட்டு வருவதை நாங்கள் பார்க்கின்றோம்” எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .