Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 நவம்பர் 02 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்
இலங்கையில் ஆட்சிப் பொறுப்பைத் தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்ற நிலையில் தமிழ் மக்களின் அபிலாசைகள் அடங்கிய நிபந்தனையுடன் ஆதரவை வழங்குவது தொடர்பில் கூட்டமைப்பு தீர்மானிக்கவேண்டுமென பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
தமிழ் சட்டத்தரணிகள் பேரவை, தமிழ் சிவில் சமூக அமைப்பு, யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம், பசுமை எதிர்காலத்துக்கான நிலையம், வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு ஆகிய அமைப்புக்கள் இணைந்தே மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளன.
யாழ் ஊடக அமையத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான ஜோதிலிங்கம், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கிருஸ்ணமேனன் மேற்படி விடயத்தை தெரிவித்துள்ளனர். இதன்போது அவர்கள் அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தனர்.
அவ்வறிக்கையில்,
அரசாங்கத்தின் ஆட்சிப் பொறுப்பை யார் பொறுப்பேற்பது என்பது தொடர்பாக தென்னிலங்கையில் இரு பிரதான கட்சிகளுக்கிடையேயும்; கடும் போட்டி நிலவுகின்றது. இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பே தீர்மானிக்கும் சக்தியாக மேலெழுந்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அபிலாசைகள் அடங்கிய நிபந்தனைகளுடன் முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் எழுத்து மூல உத்தரவாதங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கோருகின்றோம். கால அட்டவணைகளை விதித்து அதன் அடிப்படையில் செயற்பட வேண்டும் என்ற உத்தரவாதத்தை பெறுமாறும் கோருகின்றோம்.
தேசம், இறைமை, சுயநிர்ணயம், சமஸ்டி அடிப்படையில் அரசியல் தீர்வு காணப்படல் வேண்டும். அரசியல் யாப்பு வடிவம் வழங்கும் போது தமிழ் பிரதேச ஒருமைப்பாட்டைப் பேணக்கூடிய அதிகார அலகு, சுயாட்சி அதிகாரங்கள், கூட்டு அதிகாரத்தில் சமத்துவமான பங்கு, அதிகாரங்களுக்கான பாதுகாப்பு என்பவற்றுக்கு உத்தரவாதம் வழங்குதல் வேண்டும். அரசியல் தீர்வு வரும் வரை தமிழ் மக்கள் தங்கள் விவகாரங்களை தாங்களே பார்க்கக் கூடிய இடைக்கால நிர்வாகத்துக்கு ஒழுங்கு செய்தல் வேண்டும்.
பயங்கரவாதத் தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட்டு தமிழ் அரசியல் கைதிகள் எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும். தமிழ்ப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்ற முயற்சிகள் நிறுத்தப்படுவதோடு மகாவலி குடியேற்றத்திட்டம் உடனடியாக வாபஸ் பெறப்படல் வேண்டும். படையினரால் பறிக்கப்பட்ட காணிகள் உடனடியாக விடுவிக்கப்படல் வேண்டும்.
வனப்பரிபாலனத் திணைக்களம், தொல்பொருட் திணைக்களம் என்பவற்றின் அத்துமீறல்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். தமிழ்ப் பிரதேசங்களில் இடைக்கால நிர்வாகம், வடமாகாண சபை, உள்ளுராட்சி சபைகள் என்பவற்றினூடாக மட்டும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
தமிழ் பிரதேசங்களில் சிங்கள மீனவர்களின் ஆக்கிரமிப்பு உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். மாவட்ட செயலகங்களில் அதிகாரங்கள் மீளவும் மாகாணசபைகளிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும். வடமாகாண சபை முதலமைச்சர் நிதியம் உடனடியாக அங்கீகரிக்கப்படல் வேண்டும். கல்முனை தமிழ்ப் பிரதேச செயலர் பிரிவு உடனடியாக தரமுயர்த்தப்படல் வேண்டும்.
காணாமல் போனோர் விடயத்தில் இடைக்காலத்தீர்வாக பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கப்படல் வேண்டும். மலையகத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் அடிப்படைச்சம்பள உயர்வுக் கோரிக்கை உடயடியாக நிறைவேற்றப்படல் வேண்டும். இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும்போது மலையக மக்களின் அரசியல் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படல் வேண்டும். மலையக மக்களின் காணி உரிமை அங்கீகரிக்கப்படுவதோடு தற்போது இடம்பெறும் மலையக வீட்டுத்திட்டங்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் தொடரப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கோரிக்கைகளை கூட்டமைப்பிடம் முன்வைத்துள்ள பொது அமைப்புக்கள் அக் கோரிக்கைகளை கூட்டமைப்புக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
21 minute ago
38 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
38 minute ago
2 hours ago
2 hours ago