Janu / 2025 ஜூலை 24 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் , காங்கேசன்துறை வீதி, தாவடியில் அமைந்துள்ள மதுபானசாலை முன்பாக புதன்கிழமை (23) இடம்பெற்ற தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சுதுமலை மத்தி, மானிப்பாயைச் சேர்ந்த 45 வயதுடைய நே.சர்வேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தாவடியில் அமைந்துள்ள மதுபான கடைக்கு அருகில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதுடன் இதன் போது காயமடைந்த நபர் மயக்கமடைந்து, வயிறு மற்றும் இடது கையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பில் சந்தேக நபர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பு.கஜிந்தன்

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .