2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

கைதடியில் கடத்தப்பட்ட வேன் மயானத்தில் மீட்பு

Freelancer   / 2023 மார்ச் 07 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்

யாழ்.கைதடியில்  கடத்தப்பட்ட  ஹயஸ் ரக வாகனம் மீசாலை வேம்பிராய் பொது மயானத்துக்கு அருகாமையில் அநாதரவாக விடப்பட்டிருந்த நிலையில் நேற்று (06)   மீட்கப்பட்டுள்ளது.

யாழ்.கைதடி மேற்கில் விற்பனைக்காக விடப்பட்டிருந்த ஹயஸ் வாகனத்தைப் பார்வையிட வந்த நபர்கள் அதனை ஓடிப் பார்க்கவேண்டுமென கூறியுள்ளனர்.

வாகனத்துக்கான சாவியை வாங்கி, இயக்கிய அவர்கள், வாகனத்தை ஓட்டி பார்த்துள்ளனர். எனினும், நீண்டநேரம் ஆகியும் அவர்கள் திரும்பவே இல்லை.  இந்த சம்பவம்  சனிக்கிழமை
(04)இடம்பெற்றுள்ளது.

இதுதொடர்பில் வாகனத்தின் உரிமையாளரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே குறித்த ஹயஸ் வாகனம் மீசாலை வேம்பிராய் பொது மயானத்துக்கு அருகாமையில் இலக்கத் தகடுகள் அகற்றப்பட்டு, அநாதரவாக  விடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது என தெரிவித்த சாவகச்சேரி பொலிஸார், மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X