Niroshini / 2021 ஜனவரி 25 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இருந்தே, இது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, வடமாகாணச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இலங்கைக் கடற்பரப்புக்கள் அத்துமீறி மீன் பிடித்தக் குற்றச்சாட்டில், 9 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு, கடந்த 10 நாள்களாக ஊர்காவற்றுறை நீதிமன்றின் உத்தரவின் கீழ் தனிமைப்படுதப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், அவர்களிடம் நேற்றுமுன் தினம் (24), மாதிரிகள் பெறப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, அவர்களில் ஒருவருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தபட்டுள்ளது.
இதனால் அவர், கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து, ஏனையோர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (24) முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் மேலும் இருவருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர், அங்கொடயிலிருந்து வருகை தந்து, இரணைமடு வீதி சீரமைப்புப் பணிக்குழாமின் சாரதியாகக் கடமையாற்றுபவர் ஆவார்.
மற்றையவர், வவுனியா பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றுபவர் ஆவார்.
அவர் காய்ச்சல் காரணமாக, வவுனியா பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்காக சென்ற போது, அவருக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, அவருக்கு தொற்றுள்ளமை உறுதிசெய்யப்பட்டது.
37 minute ago
41 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
41 minute ago
2 hours ago
2 hours ago