Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2019 ஏப்ரல் 22 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். மத்திய பஸ் நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (21) இடம்பெற்ற குண்டு வெடிப்புச்சம்பவங்களைத் தொடர்ந்து யாழ்.மத்திய பஸ் நிலையத்துக்கு அருகில் சந்தேகத்துக்கு இடமான முறையில் கையில் பயண பொதியுடன் ஒருவர் நடமாடியுள்ளார்.
அது தொடர்பில் அங்கிருந்தவர்கள் யாழ்,பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கியுள்ளனர். தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை விசாரணைக்கு உட்படுத்திய போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியதுடன், வெளிமாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தமையால் பொலிஸார் குறித்த நபரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த போது, தான் திருகோணமலையை சேர்ந்தவர் எனவும், வேலை தேடி யாழ் நகருக்கு வந்ததாகவும், யாழ்.நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் காலை வேலை கேட்டு சென்றதாகவும், யாரும் வேலை தராததால், மீண்டும் திருகோணமலைக்கு செல்வதுக்கு தீர்மானித்து பஸ்ஸ_க்காக காத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளின் போது கூறிய தகவல்கள் மற்றும் அவரது அடையாளங்களை பொலிஸார் உறுதிப்படுத்திய பின்னர் அவரை விடுவித்துள்ளனர்.
49 minute ago
1 hours ago
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
23 Aug 2025