2025 மே 20, செவ்வாய்க்கிழமை

‘கையாளாகாத ஆட்களால் தான் இந்த நிலைமை’

Editorial   / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

கையாளாகாத ஆட்களால் தான் மாகாண சபையில் இந்த நிலைமை எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, யார் மீதும் பழியைப் போட்டு விட்டுத் தப்பித்துக் கொள்வதற்கே சகலரும் முயலுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் 133ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலக சபா மண்டபத்தில் சபைத் தலைவர் சிவஞானம் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதன்போது, யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு கிராமிய வங்கிகளின் சமாசத்தால் மேற்கொள்ளப்பட்ட சீமெந்து விற்பனை தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாட்டுக் குழுவின் சிபார்சு ஒன்றை அவைத் தலைவர் சிவஞானம் சபையில் முன்வைத்தார்.

இந்த விடயம் தொடர்பான விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே, பசுபதிப்பிள்ளை மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு மாகாணத்தின் கூட்டுறவுச் சங்க ஊழல் முறைகேடுகள் தொடர்பாக இங்கு பல தடவைகள் பேசப்பட்டிருக்கின்றன. ஆனால் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆகவே நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்றே கோரிக்கை விடுத்து வருகின்றோம்” என்றார்.

மேலும், இங்குள்ள பல பிரச்சனைகளுக்கு யாரிம் குற்றத்தைச் சுமத்திவிட்டு தப்பித்துக் கொள்வதற்கே பார்க்கின்றனர். ஆனால், அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. கையாளாகாதவர்களால் தான் சபைக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X