2025 ஓகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை

கொயிலாமனை மக்கள் போராட்டம்

Niroshini   / 2021 நவம்பர் 15 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்

இராமாவில் கிராமசேவகர் பிரிவு மற்றும் தாவளை இயற்றாளை கிராமசேவகர் பிரிவை எல்லைப்படுத்தும் தெருவை, தனியார் சிலர் அடைத்து வைத்துள்ளமையை கண்டித்து, அப்பகுதி மக்கள், இன்று (15) காலை 7 மணியில் இருந்து, கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.


இராமாவில் கிராமசேவகர் பிரிவு மற்றும் தாவளை இயற்றாளை கிராமசேவகர் பிரிவை எல்லைப்படுத்தும் தெருவை, தனியார் சிலர் அடைத்து வைத்துள்ளமையால்,  குளத்துக்குள்ளால் தமது பயணத்தை மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால், மாணவர்கள் தமது கல்விச் செயற்பாட்டை மிகுந்த சிரமத்தின் மத்தியில் மேற்கொள்கின்றனர். இடுப்பளவுக்குள்ளான குளத்து நீருக்குள்ளால் பாடசாலைக்குச் செல்லும் துன்பியலான நிலையில் உள்ளதை அவதானிக்க முடிகிறது.

சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயண்படுத்தி வரும் இவ்வீதியை தனியார் சிலர், அது தமது காணி எனத் தெரிவித்து குளத்துடன், இணைத்து வீதியையும் மறித்து வேலியை அடைத்துள்ளனர்.

இதன் பிரகாரம், தனியார் காணிக்காரர்கள் வீதியை மறித்தும் குளத்தின் ஒரு பகுதியை இணைத்தும் தமது எல்லையை இட்டுள்ளனர்.

இதனால், சுமார் 35 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாரிய வெள்ளத்தின் மத்தியில் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.

இந்த வீதியானது, சாவகச்சேரி பிரதேச சபை வீதி வரைபடத்தில் குறியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .