Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2020 மார்ச் 17 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
தற்போது நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு மருத்துவ முறைகளோடு இறை வழிபாடும் மிக அவசியாமாகுமென்று, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இந்து கற்கைகள் பீடத்தின் சம்ஸ்கிருத துறை தலைவர் கலாநிதி பிரம்மஸ்ரீ பாலகைலாசநாத சர்மா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில், இன்று (17) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், இலங்கை அரசாங்கம் கொரோனவை கட்டுப்படுத்துவதற்கான வேலைகளை முன்னெடுத்து வருகின்றதெனவும் இது தவிர எமது முறைப்படி ஆன்மீக ரீதியாக என்ன செய்யலாம் என்பதை தாம் சிந்திக்க வேண்டுமெனவும் கூறினார்.
முதலில் அதற்கு இறையருள் மற்றும் நம்பிக்கை வேண்டுமெனத் தெரிவித்த அவர், வேதம், அதர்வண வேதம், கந்த சஸ்டி கவசம் போன்ற பதிகங்களில் இதற்கான தீர்வுகள் முன்னரே கூறப்பட்டு விட்டனவெனவும் கூறினார்.
குறிப்பாக, கொவிலுக்கு உள்ளே செல்ல முன்னர் கை, கால் கழுவி விட்டு செல்லும் வழமை உள்ளதாகத் தெரிவித்த அவர், இதே போன்ற செயற்பாடு ஒன்றை தான் ஏற்பட்டுள்ள கொரோன நோயில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கு செய்யுமாறு சுகாதர பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனரெனவும் கூறினார்.
அர்ச்சனையின் போது, வேப்பிலை பயன்படுத்தல், தீர்த்தத்தில் மிளகு சேர்த்தல், தூபங்கள் ஏற்றுதல் போன்ற முறைகள் தொற்று நீக்கும் முறைகளாக உள்ளனவெனவும், அவர் கூறினார்.
“எளிமையாக வாழ்ந்து, ஏனையவர்களுக்கு உதவி செய்து இறை வழிபாட்டில் ஈடுபட வேண்டும். இது, எமது இறைவனுக்கு கொடுக்கும் சோதனை. ஆகவே, இறைவனை நாம் சாந்தபடுத்த வேண்டும். இதில் இருந்து விடுபடுவதற்கு நாம் ஆன்மீக இறை சிந்தனை வேண்டும்” எனவும், அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago
8 hours ago