Editorial / 2020 மார்ச் 17 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
கொரோனா வைரஸ் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த முற்பட்ட ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி பரா.நந்தகுமார் மீதும் அவரது நண்பர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம், நல்லூரில் உள்ள ஐஸ்கிறீம் விற்பனை நிலையத்துக்கு முன்னால், நேற்று (16) பிற்பகல் இடம்பெற்றது.
ஐஸ்கிறீம் விற்பனை நிலைய பணியாளர்களும் மேலும் சிலரும் இணைந்தே, இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனரென, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதையடுத்து, ஐஸ்கிறீம் விற்பனை நிலையப் பணியாளர்கள் இருவர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலர் தப்பியோடிவிட்டனர்.
வைத்திய கலாநிதி நந்தகுமார் மற்றும் அவரது நண்பரான யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தை சேர்ந்த த.சிவரூபன் ஆகியோர், நேற்று பிற்பகல், கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, வெளிநாட்டு பிரஜைகள் இருவர் ஐஸ் கிறீம் விற்பனை நிலையத்தினுள் செல்வதை அவதானித்தனர்.
அங்குச் சென்ற வைத்தியரும் அவரது நண்பரும், குறித்த வெள்ளை இனத்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சைக்குட்படுத்தப்பட வேண்டியவர்கள் என்பதை றியோ விற்பனையாளர்களுக்கு எடுத்துக் கூறினர்.
இது தொடர்பாக, யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரிக்கு தகவல் வழங்கிய வைத்தியர் நந்தகுமார், அவர் வரும்வரை தமது நண்பருடன் அங்கு காத்திருந்தார்.
இதன்போது ஐஸ்கிறீம் நிலைய பணியாளர்களும் வேறு சிலரும் திடீரென இருவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
32 minute ago
52 minute ago
59 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
52 minute ago
59 minute ago
3 hours ago