Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 27 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கி.பகவான்
உணாவில் கிழக்கு பகுதியிலுள்ள குளத்துக்குள், இன்று ஞாயிற்றுக்கிழமை (27) மாலை கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
குளத்தின் புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் கைக்குண்டு இருப்பதனைக் கண்டுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதுடன், நாளை திங்கட்கிழமை (28) இராணுவத்தினரின் குண்டு செயழிலக்கும் பிரிவினர் மேற்படி கைக்குண்டை மீட்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .