Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 டிசெம்பர் 21 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
மருதனார்மடம் பகுதியிலுள்ள அரிசி ஆலையில் காசோலை மோசடியில் ஈடுபட்ட அளவெட்டி தெற்கு பகுதியினை சேர்ந்த 33 வயதுடைய நபரை எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்க மல்லாகம் நீதிமன்ற பதில் நீதிவான் என்.தம்பிமுத்து, செவ்வாய்க்கிழமை (20) உத்தரவிட்டார்.
அளவெட்டிப் பகுதியினை சேர்ந்த நபர், மருதானார்மடத்தில் அரிசி ஆலை நடத்தி வரும் பாதிக்கப்பட்ட நபரிடம் அரிசி கொள்வனவு செய்துள்ளார். அதற்காக 4 இலட்சத்து 93 ஆயிரத்து 700 ரூபாய்க்கு பெறுமதியான 7 காசோலைகளை வழங்கியுள்ளார்.
வழங்கப்பட்ட காசோலைகளை வங்கியில் வைப்பிலிடபோது, குறித்த நபரின் வங்கிகணக்கில் பணம் இல்லாத காரணத்தினால் வழங்கப்பட்ட காசோலைகள் திரும்பியுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட நபர், அரிசி கொள்வனவு செய்தவரிடம் பணத்தினைத் தருமாறு கோரியுள்ளார்.
தருவதாகக் கூறியவர் நீண்டகாலமாக இழுத்தடிப்பு செய்து வந்துள்ளதுடன், பணத்தினை வழங்கவில்லை. இதனால் அரிசி ஆலை உரிமையாளர், சுன்னாகம் பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட குற்றத்தடுப்பு பொலிஸார் மோசடியில் ஈடுபட்ட நபரைக் கைதுசெய்திருந்தனர்.
13 minute ago
24 minute ago
29 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
29 minute ago
30 minute ago