Niroshini / 2016 மார்ச் 31 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஐ.நேசமணி
காரைநகர் பிரதேச செயலக மகளிர் தினம் பிரதேச செயலர் திருமதி தே.பாபு தலைமையில் பிரதேச செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (31) நடைபெற்றது.
இதம் நிறுவன அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், காரைநகரில் உள்ள பெண்களும் பெண்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வுக்கு, சத்திய சாயி சேவா நிறுவன வடபிராந்திய இணைப்பாளர் வைத்திய கலாநிதி சிவகணேசன், வைத்திய கலாநிதி சிவசங்கர், வேலணை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தரும் யாழ்.போதனா வைத்தியசாலையின் உளவளத் துணையாளர் நவராஜ் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர்.
காரைநகர் பிரதேச செயலகத்தால் நடத்தப்பட்ட கைப்பணி உற்பத்தி பயிற்சியில், பயிற்சி பெற்றவர்களுக்கிடையே நடத்தப்பட்ட போட்டியில் வெற்றிபெற்றோருக்கான பரிசில்களும் இதன்போது வழங்கப்பட்டன.


5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago