2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் 2,418 கிலோமீற்றர் நீளமான வீதிகள் புனரமைக்கப்படவில்லை

Gavitha   / 2015 நவம்பர் 13 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்குச் சொந்தமான 253 கிலோமீற்றர் நீளமான வீதிகளும்; பிரதேச சபைகளுக்கு சொந்தமான 2,165 கிலோ மீற்றர் வீதிகளும் புனரமைக்கப்படாமல் உள்ளதாக, மாவட்டச்செயலகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் முக்கிய பிரதான வீதிகள் புனரமைக்கப்;படாமை மற்றும் பின் தங்கிய கிராமங்களுக்கான  போக்குவரத்து வசதிகள் இன்மையால், இம்மாவட்ட மக்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்;கின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் யுத்;தத்தின் பின்னரான மீள்குடியமர்வு  மேற்கொள்ளப்பட்டு ஆறு ஆண்டுகளை எட்டுகின்ற போதும்,  இன்றுவரை குறிப்பிட்ட சில வீதிகள் புனரமைக்கப்படாமை,   போக்குவரத்;து வசதிகள் ஏற்படுத்தப்படாமை பாரிய ஒரு பிரச்சனையாக காணப்படுவதுடன், பின் தங்கிய பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது.

குறிப்பாக கண்டாவளைப் பிரதேசத்தின் கல்லாறு, சுண்டிக்குளம், பிரமந்தனாறு, தட்டுவன்கொட்டி, உள்ளிட்ட கிராமங்களும் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி உள்ளிட்ட பிரதேசங்களில் ஏராளமாக கிராமங்களும் போக்குவரத்து வசதிகள் இன்றி உள்ளன.

இதனால் இந்தப்பகுதிகளில் வாழ்கின்ற தமக்கான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்;வதில் அன்றாடம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .