2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

‘சடலங்களை அடக்கம் செய்ய 1,000 ரூபாய் கட்டணம் அறவீடு’

Editorial   / 2020 ஜனவரி 22 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட இந்து மயானங்களில், சடலங்களை எரியூட்டுவதற்கோ அல்லது புதைப்பதற்கோ 1,000 ரூபாய் கட்டணமாக அறவிடப்படுமென, வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார். 

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், இந்தக் கட்டணத்தை அலுவலக வேலை நாள்களில், முற்பகல் 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 4.15 மணி வரை, உரிய உப அலுவலகத்தில் செலுத்துமாறும் சனி, ஞாயிறு ஆகிய பொது விடுமுறை தினங்களில், உரிய உப அலுவவலகத்துக்குரிய பொது நூலகத்தில் செலுத்துமாறும் தெரிவித்தார். 

அனுமதிக்காக, மேற்குறித்த இடங்களில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, பூர்த்தி செய்து, அதை, இறப்பு தொடர்பான கிராம சேவகர் அல்லது வைத்திய அதிகாரியின் கடிதத்துடன் இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டுமெனவும், தவிசாளர் சோ.சுகிர்தன் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X