Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மார்ச் 13 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
“வடமாகாண சபை அமர்வு நாட்களில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் நடத்தப்பட்டால் அதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்போம்” என வடமாகாண சபை கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் 118 ஆவது அமர்வு இன்று (13) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடமாகாண சபை அமர்வு இன்று நடைபெறும் என தெரிந்தும் கரவெட்டி பிரதேச செயலகத்தில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெறுகின்றது.
மாகாண சபை உறுப்பினர்கள் அமர்வுக்கு வருவதா, ஒருங்கிணைப்பு கூட்டத்திற்கு செல்வதா? மாகாணத்துக்கு தெரியாமல் மத்திய அரசாங்கம் தமது திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நோக்குடனேயே மாகாண சபை அமர்வு நடைபெறும் நாளில் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தை ஒழுங்கு செய்கின்றார்கள் என நினைக்கின்றேன்.
இனிவரும் காலங்களில், மாகாண சபை அமர்வு நடைபெறும் நாளில் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் நடத்தப்பட்டால் அதற்கு எதிராக போராடுவோம்” என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .