2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சபை அமர்வு தாமதம்

Kogilavani   / 2017 மார்ச் 09 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வட மாகாண சபையின் முன்னால், வடக்கு மாகாண வேலையற்றப் பட்டதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் காரணமாக, இன்று (09) இடம்பெற்ற சபை அமர்வு, சுமார் இரண்டரை மணிநேரத் தாமதத்துக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகளின் பிரதிநிதிகள் 7 பேரை, மாகாண சபைக்குள் அழைத்து, மாகாண சபையின் உறுப்பினர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குறித்த பேச்சுவார்த்தை, சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றது.

இதன்போது, மாகாண அமைச்சுக்களின் கீழான வெற்றிடங்களை நிரப்புவதற்கு தாம் தயாராக உள்ளதாகவும் அதற்கு, வடமாகாண ஆளுநர் அனுமதியளித்தால், வெற்றிடங்களை நிரப்ப முடியும் எனவும், அதற்காக எதிர்வரும் 13ஆம் திகதி ஆளுநரைச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும், மாகாண சபை உறுப்பினர்களால் வாக்குறுதியளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X