2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

சாத்திரக்காரர்கள் ஐவர் யாழில் கைது

Editorial   / 2018 ஓகஸ்ட் 09 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.விஜித்தா

 

இந்தியாவில் இருந்து வருகைதந்து, யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த 5 சாத்திரக்காரர்களை, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அதிகாரிகள், இன்று (09) கைதுசெய்துள்ளனர்.

கொழும்பிலிருந்து வருகைதந்த குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள், யாழ்ப்பாண நகரிலுள்ள பிரபல தங்குமிடத்தில் வைத்தே, மேற்படி ஐந்து பேரையும் கைதுசெய்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து வருகைதந்த இவர்கள், இலங்கையில் தங்கியிருப்பதற்கான விசா அனுமதிக் காலம் நிறைவடைந்த பின்னரும், இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு, கைதுசெய்யப்பட்ட ஐந்து பேரையும், கட்டுநாயக்க விமான நிலைய அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதுடன், விசாரணையின் பின்னர் அவர்களை,  நீதிமன்றத்தில்ல் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக, அவ்வதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .