Niroshini / 2021 நவம்பர் 15 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன், எஸ். நிதர்ஷன்
வவுனியா மாவட்டத்தின் இனப்பரம்பலை மாற்ற எடுக்கும் முயற்சிக்கெதிராக, வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்கு முன்பாக, இன்று (15) காலை, மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
திட்டமிட்ட குடியேற்றத்துக்கு எதிரான மக்கள் போராட்ட குழு மற்றும் தமிழ்அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில், குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது,
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், "எங்கள் நிலம் எமக்கு வேண்டும்", "தொல்பொருள் திணைக்களமே வரலாற்றை திரிபுபடுத்தாதே", "அதிகார இனவெறியை தமிழர்கள்மீது காட்டாதே", "சிங்கள் குடியேற்றத்தை நிறுத்து" போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
இதேவேளை, ஜனாதிபதிக்கு அனுப்பும் நிமித்தம் வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், சி.சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, பிரதேச சபை தலைவர்களான ச.தணிகாசலம், எஸ். யோகராசா, நகரசபை தவிசாளர் இ.கௌதமன் உட்பட அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
51 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago